முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Wednesday, November 30, 2011

பொன்மொழிகள் - 83

நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க 
வேண்டுமென்றால், முதலில் நீங்கள்
 கேளுங்கள்.
 (ஜான் உடன்)

பொது அறிவு-72


பரான நதி தென் அமெரிக்காவில்
உள்ளது இதன் நீளம் 4,498
கிலோ மீற்றர் ஆகும்

தகவல் - 83

1999 ம் ஆண்டு  இந்தியாவில் உள்ள 
பெரம்பலூர் என்ற இடத்தில் முதன் 
முதலாக  முழுவதும் எவர்சில்வரினால்  
 புகையிரதம்   உருவாக்கப்பட்டது.

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 24

மனப்பாடமாக்கவேண்டிய சகல
வற்றையும் நன்றாக மனப்பாடம்
செய்தல் மிக மிக அவசியம்
அப்படி செய்யாவிட்டால் அந்த
வினாவிற்குரிய சகல புள்ளிக
ளையும் இழக்கவேண்டிய நிலை
ஏற்படும்.

மருத்துவகுறிப்புக்கள்-83

நாவல்பழம்
தினமும் நாவல் விதையை தூளாக்கி
2 - 4 கிராம் சாப்பிட்டு வந்தால் சக்கரை
நோய் கட்டுபாட்டுக்குள் வரும்

சிந்தனைத்துளிகள் -83

வலிமையற்றவர்களால் எப்போதும் மன்னிக்க முடியாது. மன்னிப்பு வலிமையானவர்களின் குணம்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Monday, November 28, 2011

பொது அறிவு-71

ஜென்சி நதி ரஷ்சியாவில்
உள்ளது இதன் நீளம் 4506
கிலோ மீற்றர் ஆகும்


பொன்மொழிகள் - 82

நான் மட்டுமே உலகை மாற்ற முடியாது. 
ஆனால் பல அலைகளை ஏற்படுத்தக்கூடிய 
சிறு கல்லை என்னால் தண்ணீரில் தூக்கி 
எறிய முடியும். 


(அன்னை தெரசா)

தகவல் - 82

காற்றில் சார்ஜ் ஆகும் பற்றரி 
கண்டுபிடிப்பு - 1 

உலகிலே முதன் முறையாக காற்றின்
மூலம் சார்ஜ் ஆகக்கூடிய பற்றறியை
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர் .அத்துடன் இதற்கு
"ஸ்டைர்" என்ற பெயரிட்டுள்ளனர்.இந்த
பற்றரி மீது அமைக்கப்பட்டுள்ள வலை
போன்ற பகுதி வழியாக காற்றிலுள்ள
ஒட்சிசன் பற்றரிக்குள் கிரகிக்கப்படும் .

தொடரும் ---  

மருத்துவகுறிப்புக்கள்-82

நெல்லிக்காய் - 4
ஒரு மேசைக்கரண்டி நெல்லிக்காய்
சாற்றுடன் ஒரு கப் பாகற்காய்
சாறு சேர்த்து இரண்டு மாதம் தொடர்ந்து
குடித்தால் சுரக்காத இன்சுலின் சுரக்கும்

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 23

பரீட்சையை நினைத்து பயப்படாதீர்கள்
"பயம் என்பது தோல்வியின் முதல்படி
நம்பிக்கை என்பது வெற்றியின் அடித்
தளம்" என்பதை ஒரு போதும் மறக்க
வேண்டாம். பரீட்சையில் நிச்சயம்
சித்தியடைவேன் என்ற நம்பிக்கையுடன்
பரீட்சையை எழுதுங்கள்.

சிந்தனைத்துளிகள் -82

சோம்பல் சுகமானது, ஆனால் மோசமானது, மகிழ்ச்சியாக இருக்க எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருங்கள்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, November 27, 2011

பொது அறிவு-70


குவாங்கோ  நதி சீனாவில்
உள்ளது இதன் நீளம் 4667
கிலோ மீற்றர் ஆகும்

பொது அறிவு-69

ஒப்  நதி ரஷ்சியாவில்
உள்ளது இதன் நீளம் 5567
கிலோ மீற்றர் ஆகும்

தகவல் - 81


குத்துச்சண்டை போட்டிகளில்
பங்கேற்பதிர்கானம் குறைந்த
வயது பதினெட்டாகும்.

பொன்மொழிகள் - 81

உங்களைப் பற்றி நினைப்பதே, வாழ்வில், 
உயர்நிலையின் அடித்தளம். 
(கோக்கோ சென்னல்)

மருத்துவகுறிப்புக்கள்-81

அதிகளவில் நாவல் பழத்தை
சாப்பிடக்கூடாது அளவுடன்
சாப்பிடவும் அத்துடன்
அளவுக்கதிகமாக சாப்பிட்டால்
பக்கவிளைவை ஏற்படுத்தும்

சிந்தனைத்துளிகள் -81

உங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் இன்றே பகிர்ந்துகொள்ளுங்கள்

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 22

ஏதாவது பாடத்தில் குறைவான புள்ளிகளை
எடுத்திருந்தால் அப்படி புள்ளிகள் குறைவாக
இருப்பதிற்கு காரணம் என்ன என்பதை
ஆராய்ந்து அதனை சரி செய்தால் அந்த
பாடத்தில் கூடிய புள்ளிகளை பெற்று
கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, November 26, 2011

பொன்மொழிகள் - 80

வாழ்க்கையை தவறவிட்டு, அமைதியை 
வேறு எங்கும் பெற முடியாது. 
(விர்ஜீனியா உல்ஃப்)

பொன்மொழிகள் - 79

அமைதியைப் பற்றி பேசினால் மட்டும் போதாது. அதை ஒருவர் நம்ப வேண்டும். அப்படி நம்பினால் மட்டும் போதாது. அதை அவர் செயல்படுத்த வேண்டும். (எலனார் ரூஸ்வெல்ட்)

பொது அறிவு-68


யாங்கிசிக்கியாங் நதி சீனாவில்
உள்ளது இதன் நீளம் 5797  கிலோ மீற்றர்
ஆகும்

மருத்துவகுறிப்புக்கள்-80

நெல்லிக்காய் - 3

அஸ்மா அல்லது நெஞ்ச்சுசளி
உள்ளவர்கள் அதிகாலையில்
ஒருமேசைக்கரண்டி நெல்லிக்காய்
சாற்றுடன் அதேஅளவு தேனைக்
கலந்து சாப்பிட்டால் குணமடைவர்

தகவல் - 80

கான்ட்டர்பரி-விஷ்டேபிள் புகையிரத
நிலையத்தினால் வழங்கப்பட்ட
புகையிரத சீசன் பற்றுச்சீட்டுகளே
(டிக்கட்டுகள்)அங்கீகரிக்கப்பட்ட
முதல் சீசன்ரிக்கட்டுக்கள் ஆகும்

சிந்தனைத்துளிகள் -80

சிறந்த பண்புகளுள் தனித்தன்மைப் பெற்றது எளிமையே

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 21

பாடசாலையில் ஆசிரியர் படிப்பிக்கும்
போது முழுக்கவனத்துடன் பாடத்தினை
கவனித்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்
பாடசாலை விட்டு வீடு திரும்பியதும்
அன்றைய தினமே ஆசிரியர் படிப்பித்த
பாடத்தை திருப்பி பார்த்து அதில் உள்ள
தலைப்பு,பக்க தலைப்பு போன்ற பல
குறிப்புகளை நன்றாக மனதில் குறித்து
வைத்து கொள்ளுங்கள்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, November 25, 2011

மருத்துவகுறிப்புக்கள்-79

நெல்லிக்காய் - 2
வாந்தி (சத்தி) எடுப்பவர்களுக்கு நெல்லிக்காயை
துவையல் செய்து சாப்பிட கொடுத்தால்
குணமடையும்.

பொன்மொழிகள் - 78

உரிய வயது படிப்பினையே, ஒருவரின் நிலைத்த 
வாழ்விற்கான ஏணிப்படிகள். 
(ஹென்றி புருக்ஸ் ஆடம்ஸ்)

பொது அறிவு-67


மிசூரி மிசிசிப்பி நதி வட  அமெரிக்காவில்
உள்ளது இதன் நீளம் 6020  கிலோ மீற்றர்
ஆகும்

தகவல் - 79

இந்தியாவில் ஜூன் - செப்டம்பர்
மாதங்களில் பருவமழை பொழிகிறது.

சிந்தனைத்துளிகள் -79

சிறந்த பண்புகளுள் தனித்தன்மைப் பெற்றது எளிமையே

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 20

பாடங்களை படிக்கும் போது
முக்கியமானவற்றை பலவித
கலர் பென்சில்களால் அல்லது
பலவித கலர் பேனைகளால்
கோடிட்டு வைத்தால் தேவையான
போது அவற்றை எடுத்து படிக்கலாம்
அத்துடன் அப்படி கோடிடுபவை
மனதில் நன்றாக பதிந்துவிடும் .

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, November 24, 2011

மருத்துவகுறிப்புக்கள்-78

நெல்லிக்காய் - 1

நெல்லிகாயை சரியான முறையில்
பக்குவம் செய்து சாப்பிட்டால்
வயதானவர்கள் கூட மாப்பிள்ளையாக
மாறிவிடுவார்கள்

பொன்மொழிகள் - 77

அனைத்தையும் நீ அறிந்தால் 
அனைத்தையும் நீ மன்னிப்பாய்

பொது அறிவு-66


நைல் நதி ஆபிரிக்காவில் உள்ளது
இதன் நீளம் 6690  கிலோ மீற்றர்
ஆகும்

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 19

எல்லாப் பாடங்களுக்குரிய மாதிரி
வினாத்தாள்,முதல் வருட வினாத்
தாள்கள்,பழைய வினாத்தாள்கள்
ஆகியவற்றை நன்றாக விளங்கி
படித்தால் எந்த எந்த பாடங்களில்
என்னஎன்ன பகுதிகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து படிக்க
வேண்டும் அத்துடன் எப்படிப்பட்ட
வினாக்கள் வரும் என்பதை விளங்கிக்
கொள்ளலாம் அதன் பின்பு அவற்றை
நன்றாக படிக்கலாம் .

தகவல் - 78

உலகின் முதல் பாதாள புகையிரத
போக்குவரத்து 1863 ம் ஆண்டு
பாடிங்டனில் இருந்து ஃபேரிங்டன்
வரை மக்களின் உள்ளூர் பயன்
பாட்டிற்காக விடப்பட்டது.

மருத்துவகுறிப்புக்கள்-77

கசகசாத்தூள் ,உப்புத்தூள் ,கொப்பரைத்
தேங்காய்த்தூள் ,சிறிதளவு பெருங்காயத்
தூள்,நெய் ஆகியவற்றுடன் சோற்றினை
(சாதத்தினை )கலந்து சாப்பிட்டு வந்தால்
வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆகியவை
மாறிவிடும்.

சிந்தனைத்துளிகள் -78

செய்வதெல்லாம் சரி என்ற நினைப்பில் நல்லொழுக்கங்களை கைவிட்டுவிடக்கூடாது

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, November 23, 2011

மருத்துவகுறிப்புக்கள்-76

பல் வலி,பல் கூச்சம் ஆகியன
ஏற்பட்டால் சிறிய துண்டு சுக்கை
எடுத்து அதனை வாயில் அடக்கிக்
கொள்ளவும் அதன்பின்னர் நோய்
குணமடையும்.

பொன்மொழிகள் - 76

அன்பான சிநேகிதனை
ஆபத்தில் நீ அறி .

பொது அறிவு-65

அமேசன் நதி தென் அமெரிக்காவில்
உள்ளது இதன் நீளம் 6750  கிலோ மீற்றர்
ஆகும் 

தகவல் - 77

உலக கோப்பைக்கான கால்பந்தாட்டப்
போட்டி சென்ற வருடம் ஆனி மாதம்
தென்ஆபிரிக்காவில் நடைபெற்றது.

சிந்தனைத்துளிகள் -77

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 18


எல்லா பாடத்தையும் படிக்கும்
போது அதிலிருந்து சிறு சிறு
குறிப்புகளை எடுத்து ஒரு
அப்பியாசப்புத்தகத்தில் எழுதி
வைத்தால் பரீட்சைக்கு படிக்கும்
போது அல்லது அப்பாடத்தில்
ஏற்படும் சந்தேகத்தின் போதும்
அதனை திருப்பி பார்க்க
வசதியாக இருக்கும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, November 22, 2011

பொன்மொழிகள் - 75

அச்சம் அகலும் போது அரும்பும் நம்பிக்கை
அதிக உற்சாகத்தை தரும்.

பொது அறிவு-64

பூமியின் வயது ஏறத்தாழ
4540 மில்லியன் வருடங்
களாகும் 

மருத்துவகுறிப்புக்கள்-75

கர்ப்பிணிப் பெண்கள் உள்ளியை (பூண்டை)
சேர்த்து சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஆகும்
அத்துடன் பால் பவுடர் குடிக்கும் குழந்தைகளுக்கு
பாலுடன் ஒரு உள்ளியை(பூண்டை)நசுக்கி
கலந்து சிலநிமிடங்கள் வைத்தபின்பு உள்ளியை
(பூண்டை)எடுத்து விட்டு குழந்தைகளுக்கு பாலை
குடிக்க கொடுத்தால் வயிறு ஊதுதல்(உப்புசம் )
மலம் வெளியேறாமை போன்ற நோய்கள் குணம்
ஆகும்:

தகவல் - 76

இந்தியாவில் முதன் முதலாக
புகையிரத பாதை மும்பையில்
தான் போடப்பட்டது இதன் நீளம்
34 கிலோ மீற்றர் ஆகும்.

சிந்தனைத்துளிகள் -76

அறிவு நன்மை பயக்கும், அறியாமை ஆபத்தில் மாட்டிவிடும்

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 17

படிக்கும் பாடத்தை திரும்ப
திரும்ப சொல்லிக் கொண்டு
இருப்பதை விட ஒருமுறை
அதனை எழுதிப் பார்த்து
திருத்தி விட்டால் அவை
மனதில் ஆழமாக பதியும்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, November 21, 2011

பொது அறிவு-63

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில்
உள்ள தூரம் 1,488,000 கிலோ மீற்றர்
ஆகும்   

பொன்மொழிகள் - 74

உண்மை அழிவற்றது
பொய்மை அழியக்கூடியது

மருத்துவகுறிப்புக்கள்-74

இரத்த அழுத்தம்,வயிற்றுக் கோளாறுகள்,
ஆண்மைக்குறைவு,அல்சர்,காசநோய்,
அஸ்மா,கான்சர் ஆகிய நோய்களுக்கு
உள்ளி(பூண்டு)சிறந்த மருந்து என
ஆராய்ச்சிகள் கூறுகிறது:

தகவல் - 75

உலகிலே மிகமிக அதிகமான
புத்தகங்களை எழுதியவர்
அலெக்ஸ்சாந்திர டுமாஸ்
ஆவார் இவர் எழுதிய
புத்தகங்களின் எண்ணிக்கை
1200 ஆகும்.

சிந்தனைத்துளிகள்-75

மெதுவாக முன்னேறுவதில் பயம் வேண்டாம்; நிலைத்து நிற்கவேண்டும் என்பதில் பயப்படுங்கள்

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 16

படிக்க தொடங்கும் முன்பு
பசியாக இருந்தால் வயிறு
நிறைய சாப்பிடாமல் பசிக்கு
தேவையானளவு சாப்பிடுங்கள்
அத்துடன் தண்ணீர் குடிக்க,வேறு
தேவைகளுக்கு செல்ல என
அடிக்கடி எழுந்து செல்லாமல்
அவை யாவற்றையும் முன்பே
செய்துமுடியுங்கள்.அதன் பின்பே
படிக்க தொடங்குங்கள் .

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, November 20, 2011

மருத்துவகுறிப்புக்கள்-73

உள்ளியை (பூண்டை )அரைத்து
தோலில் பூசினால் தோலிலுள்ள
தொற்று நோய் குணமாகும்.

பொன்மொழிகள் - 73

வெற்றியின் உண்மையான இரகசியம்
எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே 

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 15


நண்பர்கள் அல்லது அம்மா,அப்பா
சகோதர்கள் என்று யாருடனாவது
சண்டை போட்டிருந்தால் அந்த
கவலையுடன் படிக்காமல் சண்டை
போட்டவர்களுடன் சமாதானமாகி
விட்டு அத்துடன் மனக்குழப்பங்க
ளுக்கு விடுதலை கொடுத்து விட்டு
படியுங்கள் இப்படி செய்யாமல்
படித்தீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு
தான் கஷ்டப்பட்டு படித்தாலும் நீங்கள்
படிக்கும் பாடம் உங்கள் மனதில் பதியாது .

பொது அறிவு-62

பூமியின் விட்டம் 12,756,3கிலோமீற்றர் 

தகவல் - 74

1837 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை
சேர்ந்த தாமஸ் எட்மன்ட்சன் என்ற
புகையிரத நிலைய ஊழியர் தான்
முதன் முதலில் மக்கள் புகையிரதத்தில்
செல்வத்திற்கு உரிய பயணச்சீட்டை
விநியோகித்தார் இந்த பயண சீட்டில்
தொடர் எண் எழுதப்பட்டிருந்தது.

சிந்தனைத்துளிகள் -74

மறப்போம் மன்னிப்போம்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, November 19, 2011

தகவல் - 73

உலகில் பல மொழிகளில் அகராதிகள்
எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன
அவற்றுள் முதன் முதலில் எழுதப்பட்டு
வெளியிடப்பட்ட அகராதி இத்தாலி
மொழியில் ஆகும் .

சிந்தனைத்துளிகள் -73


அமைதியைப் பற்றி பேசினால் மட்டும் போதாது. அதை ஒருவர் நம்ப வேண்டும். அப்படி நம்பினால் மட்டும் போதாது. அதை அவர் செயல்படுத்த வேண்டும். (எலனார் ரூஸ்வெல்ட்)

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-14

உங்களுடைய மூளைக்கு திறன்
அதிகமாக இருக்கலாம் ஆனால்
அதன் கவனம் ஒன்றின் மட்டும்
குவியும் போது அதில் பலன்
அதிகமிருக்கும் எனவே பாடத்தை
படித்துக்கொண்டு திரைப் பாடலை
கேட்டு கொண்டிருந்தாள் பாடமும்
மனதில் பதியாது பாடலும் மனதில்
பதியாது (ஒரு சிலருக்கு மட்டும்
ஒரே நேரத்தில் இவை இரண்டும்
மனதில் பதியும்) .

மருத்துவகுறிப்புக்கள்-72

உடலில் வீக்கங்கள் ஏற்பட்டால்

உள்ளியை (பூண்டை) அரைத்து
வீக்கங்கள் உள்ள இடத்தில்
பூசினால் குணமாகும். 

பொன்மொழிகள் - 72

அழிவுக்கு காரணம் அகந்தை
மேன்மைக்கு வழிகோலுவது தாழ்மை

பொது அறிவு-61

மத்தியக் கோட்டில் பூமியின்
சுற்றளவு 40,075 கிலோ மீற்றர் ஆகும்  

தகவல் - 72

1837 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்
உள்ள டாஸ்மான் தீபகற்பத்தில்
முதன் முதலாக புகையிரதம்
இயக்கப்பட்டது இந்த புகையிரத
பெட்டிகளை நான்கு சிறைக்
கைதிகள் இழுத்துச் சென்றனர் .

சிந்தனைத்துளிகள் -72

கேட்டுத் தெரிந்துகொள்பவன் அப்போதைக்கு முட்டாள், கேட்காதவன் எப்போதும் முட்டாளே

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-13

நீங்கள் எந்த பாடத்தை படிக்க
விரும்புகிறீர்களோ அந்த பாடத்தை
விருப்பத்துடன் படியுங்கள் அதன்
பலன் பல மடங்காக உங்களுக்கு
கிடைக்கும்.உங்களுக்கு விருப்பம்
இல்லாத ஏதாவது ஒரு பாடத்தை
நீங்கள் படிக்க வேண்டி இருக்கும்
அத்துடன் அந்த பாடம் கடினமாக
இருக்கும் என்று நினைத்து
கொண்டு அந்த பாடத்தை படிக்க
மனமில்லாமல் நீங்கள் படிப்பதை
விட என்னால் இப்பாடத்தை
இலகுவாக படிக்கமுடியும்,அத்துடன்
இப்பாடத்தை என்னால் படிக்க
முடியாவிட்டால் யாரால் படிக்க
முடியும் என நினைத்து கொண்டு
படித்தால் உங்களால் அப்பாடத்தில்
ஜெயிக்க முடியும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, November 18, 2011

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-12


ஏதாவதொரு பாடம் உங்களுக்கு
விளங்கவில்லை என்றால் அப்படம்
ஏன் உங்களுக்கு விளங்கவில்லை
என பார்க்கவும் அதன் பின்பு அதனை
படிப்பிக்கும் ஆசிரியரிடமோ அல்லது
அந்த பாடத்தை நன்றாக விளங்கி
படித்தவர்களிடம் கேட்டு உங்களுக்கு
அந்தபாடத்தில் ஏற்பட்டசந்தேகங்களை
நிவர்த்தி செயவும் அத்துடன் அப்
பாடத்தினை சந்தேகமற்ற முறையில்
விளங்கிக் கொள்ளவும்.


மருத்துவகுறிப்புக்கள்-71

சாமந்திப்பூவை தாட்சியில் (கடாயில்)
போட்டு சூடாக்கி ஒரு துணியில்
கட்டி வீக்கம் ஏற்பட்ட இடத்தில்
ஒத்தனம் கொடுத்தால் உடனடியாக
வீக்கம் குறையும்.

பொன்மொழிகள் - 71

அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள்
முட்டாள்கள் அதைப் பெற்றுவிட்டதாக 
நினைக்கிறார்கள்  

பொது அறிவு-60

பூமியின் மொத்த பரப்பு
510,056,570 சதுரக் கிலோ மீற்றர் ஆகும் . 

தகவல் - 71

சென்னை மருத்துவக்கல்லூரி
ஆரம்பித்து 175 ஆண்டுகளாகின்றன

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-11

எந்த நேரத்தில் படித்தால் மிகவும்
சிறப்பாக படிக்கமுடியும் என நீங்கள்
நினைக்கின்றீர்களோ அந்த நேரத்திலே
தினமும் படியுங்கள் அப்படி படித்தீர்கள்
என்றால் படிப்பில் ஜெயிக்க முடியும்.

சிந்தனைத்துளிகள் -71

உங்களை நன்கு அறிந்தவரும், உங்களிடம் அதையே விரும்புவருமே நண்பர் ஆவார்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, November 17, 2011

மருத்துவகுறிப்புக்கள்-70


மலச்சிக்கல்

சாமந்திப்பூக்கள் இருபதினை எடுத்து
கொதிநீரில் போட்டு மூடி 15 நிமிடங்கள்
ஊறவிடவும் அதன் பின்பு அதை வடி
கட்டவும் பின்பு இதிலிருந்து தினமும்
இரண்டு தேக்கரண்டி குடித்து வர
மலச்சிக்கல் குணமாகும்.அத்துடன்
முறையற்ற மாதவிடாய்க் கோளாறும்
சரியாகும் வயிற்று உப்சம் நீங்கும்.

பொன்மொழிகள் - 70

வெற்றியின் உண்மையான இரகசியம் 
எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே

தகவல் - 70

உலகின் முதல் மருத்துவமனை
புகையிரதம் ஜீவன்ரேகா.

பொது அறிவு-59

உலகில் மிக நீளமான மலை
அந்திஸ் மலையாகும் இதன்
நீளம் 7,241கிலோ மீற்றர் ஆகும் 

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-10

யாருடனும் சேர்ந்து படிக்காமல்
தனியாக படித்தால் படிக்கும்
பாடங்கள் எல்லாம் நன்றாக
மனதில் பதியும் என்று நீங்கள்
நம்பினால் அப்படியே தொடர்ந்து
படியுங்கள் அல்லது சேர்ந்து
படித்தால் தான் மனதில் பதியும்
என்றால் அதற்கு ஏற்றமாதிரி
நன்றாக படிக்ககூடிய நண்பர்களுடன்
சேர்ந்து படியுங்கள்.

சிந்தனைத்துளிகள் -70

பேசிய வார்த்தைகளையும், ஆற்றில் வீசிய கற்களையும் திரும்பப் பெற முடியாது.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, November 16, 2011

மருத்துவகுறிப்புக்கள்-69

சாமந்திப்பூ முறையற்ற உடல்
உஷ்ணத்தைப் போக்கி பலத்தை
தருகிறது .

பொன்மொழிகள் - 69

அழிவுக்கு காரணம் அகந்தை
மேன்மைக்கு வழிகோலுவது தாழ்மை

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-9

எங்கு படிக்கவேண்டும்?
எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்
ஆனால் படிக்கும் சூழல் அமைதியாகவும்
சுத்தமானதாகவும் கவனத்தை
சிதறடிக்காததாகவும் இடமாக
இருத்தல் அவசியமாகும்.

பொது அறிவு-58

உலகில் மிக உயரமான மலை
இமயமலை ஆகும் இதன் உயரம்
8,848மீற்றர் ஆகும் 

தகவல் - 69

நோபல் பரிசு 1901 ம் ஆண்டு தொடக்கம்
வழங்கப்படுகிறது .

சிந்தனைத்துளிகள் -69

உங்களை நன்கு அறிந்தவரும், உங்களிடம் அதையே விரும்புவருமே நண்பர் ஆவார்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, November 15, 2011

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-8

மற்றைய எல்லாவற்றையும் விட
நீங்கள் உங்களுடைய மனதில்
"நன்றாகப் படிப்பது எனது பொறுப்பு .
அது தான்என்னைப் பெற்றவர்களுக்கு
நான் செய்யும் சிறந்த கடமை "என்ற
எண்ணத்தை படிக்கும் மாணவர்கள்
சகலரும் உங்களுடைய மனதில்
ஆழமாக பதிய வைத்துவிட்டால்
உங்களுடைய கடமை கரும்பாக
இனித்து உங்களை முன்னேற்றிவிடும்

மருத்துவகுறிப்புக்கள்-68

பக்கவிளைவு இல்லாதபழசிகிச்சை -10

தர்பூசணி - 1
தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் 
உடலில் இருக்கும் நச்சுப்பொருள் 
வெளியேறி சருமம் பளிச்சிடும் 
அத்துடன் உடலில் ஏற்படும் 
கட்டிகள் ,வேர்க்குரு ஆகிய
வற்றிற்கு இப்பழத்தை தடவினால் 
இவை யாவும் மறைந்துவிடும் .
அத்துடன் அடிவயிறு சம்பந்தப்பட்ட 
பிரச்சனைகளையும் வயிற்று 
வலியையும் குணப்படுத்திவிடும் .

பொன்மொழிகள் - 68

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர்
என்று பொருளில்லை இன்னும் வெற்றி
அடையவில்லை என்று தான் பொருள்
ஆகவே வெற்றியடைய இன்னும் முயற்சி
எடுக்கவேண்டும்.

பொது அறிவு-57

இமயமலையில் உள்ள
எவரெஸ்ட் சிகரம் மிக
உயரமான மலைச்
சிகரமாகும் இதன் உயரம்
8,848 மீற்றர் ஆகும் 

தகவல் - 68

1994 ம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து
பிரான்ஸ் வரையிலான குகைவழி
புகையிரதப் பாதை அறிமுகம்
செய்யப்படுத்தப்பட்டது 

சிந்தனைத்துளிகள் -68

பேசிய வார்த்தைகளையும், ஆற்றில் வீசிய கற்களையும் திரும்பப் பெற முடியாது.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, November 14, 2011

மருத்துவகுறிப்புக்கள்-67

முட்டிவலி


தினமும் காலையிலும் மாலையிலும் 
தோப்புக்கரணம் போடவும்(இயலுமான
அளவு ) அப்படி செய்யமுடியவில்லை 
என்றால் ஜன்னல் கம்பியை பிடித்து 
கொண்டு மெதுவாக உட்காந்து 
இருந்து மெதுவாக எழும்பவும் 
இப்படிச் செய்யும் போது ஆரம்பத்தில் 
கடினமாக இருக்கும் பிறகு பழக
பழக சரியாகிவிடும் இப்படி தினமும் 
செய்யவும்:இப்படி நீங்கள் செய்ய 
ஆரம்பித்த பின்பு உங்களுடைய 
உடலில் பல மாற்றங்கள் காண்பீர்கள்
அத்துடன் சோர்வு அகன்று சுறுசுறுப்பு
வந்துவிடும் அத்துடன் உடலில் 
ஏற்படும் வாயு(காஸ்)பிரச்சனை 
இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
அடிக்கடி இஞ்சி பூண்டு (உள்ளி)
ஆகியவற்றை உணவில் சேர்க்கவும் 
இப்படி செய்தால் வாயு உடலில் 
சேராது அத்துடன் முட்டிவலியும்
மாறிவிடும்.

பொன்மொழிகள் - 67

காலமென்னும் ஆழ்கடலில் பயணம்
செய்யும் எமக்கு கலங்கரை விளக்கமாக
இருப்பவை சிறந்த நூல்களே ஆகும்.

பொது அறிவு-56

உலகின் கூறை என்பது யாது?
உலகிலேயே மிக உயர்ந்த
பீடபூமியாகிய திபெத் மேட்டுநிலம்
ஆகும் அத்துடன் இது இமயமலைத்
தொடரில் உள்ளது 

தகவல் - 67

டென்மாக் நாட்டின் தேசியசின்னம்
கடற்கரை ஆகும்.

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-7


உங்களுக்கு ஒரு பாடத்திலோ
அல்லது ஒரு பாடப்பிரிவிலோ
ஏதாவது விளங்கவில்லை என்றால்
அதனை உங்களுடைய ஆசிரியர்
உங்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவாரோ
அதனைப்போல நீங்களே உங்களுக்கு
சத்தமாக திரும்ப திரும்ப விளங்கப்
படுத்துங்கள் அப்படி நீங்கள் செய்யும்
போது உங்களுக்கு அந்த பகுதி
நன்றாக விளங்கிவிடும்.

சிந்தனைத்துளிகள் -67

நீங்கள் பயப்படவில்லை அல்லது அவமானப்படவில்லை அல்லது புண்படவில்லை என்றால், நீங்கள் இதுவரை எதையும் முயற்சிக்கவில்லை என்று பொருள்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, November 13, 2011

பொன்மொழிகள் - 66

பிரார்த்தனை என்பது கடவுளிடம்
ஏதாவது கேட்பதல்ல அது
ஆன்மாவின் ஏக்கம்.

மருத்துவகுறிப்புக்கள்-66



பக்கவிளைவு இல்லாத பழச் சிகிச்சை - 9

பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து
நிறைந்து காணப்படும் அத்துடன்
இப்பழமானது உடலுக்கு சக்தியை
கொடுப்பதோடு தசைகளையும்
வலுவடைய செய்யும், தினமும்
தேனில் பேரிச்சம்பழத்தை ஊற
வைத்து சாப்பிட்டு வந்தால்
இதயம் பலமாகும் உடல் எடை
அதிகரிக்கும் குடல் நோய்கள்
குறையும் அத்துடன் பார்வை
குறைபாடு மலர்ச்சிக்கல்
ஆகியவை குணமடையும்.

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-6


படிக்க கடினமான பாடங்களை
அல்லது பாடப்பகுதிகளை
உங்களுடைய சிடி,கசற்,
பென்ரைவ் ஆகியவற்றில்
பதிவு செய்து அதனை திரும்ப
திரும்ப போட்டு கேட்டு
பாடமாக்கலாம்.

அவையாவன -
(1)கணிதகுறியீடுகள்,வாய்ப்பாடுகள்
(2)விஞ்ஞானப்பெயர்கள்,குறியீடுகள்
(3)சமயகுறிப்புகள்
(4)ஆங்கில குறிப்புகள் ,பாடல்கள்
போன்ற பலவற்றை

பொது அறிவு-55


ஆக்டிக்  சமுத்திரம் 

இதன் பரப்பு 14,090,000 கி .மீ ஆகும்

ஆழம் சராசரி 1205 மீற்றர் ஆகும்  

தகவல் - 66

உலகில் பூமி அதிர்ச்சி அதிகமாக
ஏற்படும் நாடு ஜப்பான் ஆகும்.

சிந்தனைத்துளிகள் -66

உங்களை நன்கு அறிந்தவரும், உங்களிடம் அதையே விரும்புவருமே நண்பர் ஆவார்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, November 12, 2011

மருத்துவகுறிப்புக்கள்-65

கண்களில் நீர்வடிதல் ,கண்

இமைகளில் அரிப்பு (நமைச்சல்)
ஏற்படல் ,கண்ணில் சிகப்பு
ஏற்படல் , கண் நோ (வலி)
இவற்றில் ஏதாவது ஒன்று
அல்லது பல நோய் ஏற்பட்டால்
உருளைக்கிழங்கை தண்ணீர்
சேர்க்காமல் நன்றாக குழைத்து
(பிசைந்து)காலையும் மாலையும்
கண்ணில் வைத்து கட்டிவந்தால்
இந்த நோய்கள் குணமாகும்.

பொன்மொழிகள் - 65

மனிதன் ஒருவன் தான் சிரிக்கும்
தகுதி பெற்றவன். அதே நேரம்
பிறர் பார்த்து சிரிக்கத் தகுதி
நிலை பெற்றவனும் மனிதன்
தான் .

பொது அறிவு-54


இந்து  சமுத்திரம் 

இதன் பரப்பு 65,527,000 கி .மீ ஆகும்

ஆழம் சராசரி 3962 மீற்றர் ஆகும்  

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள் - 5

"இவ்வளவு மணித்தியாலத்திற்குள்
இந்த பாடத்தை படித்து முடித்து
விடுவேன்"என்று நேரத்தை
தீர்மானிப்பதிற்கு முன்பாக
உங்களுடைய திறமை,பாடத்தின்
எளிமை,கடினம் இவற்றை எல்லாம்
கணக்கிட்ட பின்பு பாடத்தை படித்து
முடிக்க எடுக்கும் மணித்தியாலத்தை
தீர்மானியுங்கள் .

தகவல் - 65

இந்தியாவின் முதன் முதல் மின்சார
புகையிரதம் டெக்கான் குயின் ஆகும். 

சிந்தனைத்துளிகள் -65

வாழ்வின் எந்தவொரு நிலையிலும் நம்பிக்கை அவசியம்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, November 11, 2011

மருத்துவகுறிப்புக்கள்-64

பக்கவிளைவு இல்லாத
பழச்சிகிச்சை - 8


வாழைப்பழம்


எல்லாக் காலங்களிலும் சகல
நாடுகளிலும் கிடைக்ககூடிய
பழம் வாழைப்பழமாகும்
இப்பழம் பல் வேறு நோய்
களுக்கு நிவாரணியாகவே
உள்ளது. அத்துடன் மலச்சிக்கல்
உள்ளவர்கள் இந்த வாழைப்
பழத்தை தினமும் இரவு
உணவுக்கு பின்பு சாப்பிட்டால்
மலர்சிக்கல் நீங்கும்.மன
அழுத்தம்,இரத்த அழுத்தம்
குடல் புண் ஆகிய நோய்கள்
மாறுவதிற்கு இவ் வாழைப்பழம்
மிக மிக நல்லது .

பொன்மொழிகள் - 64

ஒருவர் துன்பப்படும் போது அதைப்
பார்த்து நாம் நகைத்தல் கூடாது
ஏனென்றால் எமக்கும் அத்துன்பம்
நேரக்கூடும்

பொது அறிவு-53


அத்திலாந்தி  சமுத்திரம்

இதன் பரப்பு 82,400,000 கி .மீ ஆகும்

ஆழம் சராசரி 3926 மீற்றர் ஆகும்  

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள் - 4

தினமும் நீங்கள் படிக்கஆரம்பிக்கும்
முன்பாக அன்றையதினத்தில் நீங்கள்
எந்த பாடத்தை எவ்வளவு நேரத்தில்
படித்து முடித்துவிடவேண்டும் என்று
தீர்மானித்து விட்டு அதற்கு ஏற்ற
மாதிரிபடியுங்கள் அப்படி நீங்கள்திட்டம்
இட்டு படித்தீர்கள்என்றால் உங்களுக்கு
எல்லா பாடங்களையும் இலகுவாக
படிக்க முடியும் அத்துடன் உங்களுக்கு
பாடத்தை படிக்கும் போது எல்லா
பாடங்களின் மீது எந்த வித வெறுப்பு
அல்லது சோம்பல் தன்மை உண்டாக
வாய்ப்பு இல்லை அத்துடன் அன்றைய
தினத்தில் படிக்க வேண்டிய ஏதாவது
பாடத்தில் படிக்க நீங்கள் தீர்மானித்த
நேரத்தில் உங்களால் படித்து முடிக்க
முடியவில்லை என்றால் மேலதிகமாக
நீங்கள் படிக்க தீர்மானித்த நேரத்தை
விட ஓரு மணித்தியாலம் அல்லது
அரை மணித்தியாலம் மேலதிகமாக
படிக்க வேண்டும் என்று தீர்மானித்து
விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்படி
தினமும்கவனமாகபடித்தீர்கள் என்றால்
நிச்சயமாக நீங்கள் ஜெயிக்கலாம்.
(படித்து ஜெயிக்க நேரத்தை தீர்மானித்து
படிப்பது மிகமிக அவசியமானஒன்றாகும்)

தகவல் - 64

ப்ளுடுத்
டென்மாக்கை சேர்ந்த ஹொரால்ட்
பிலாட்டன்ட் என்ற மன்னன் ஆண்டு
வந்தான். அந்த மன்னன் ப்ளுபெரி
என்ற நீலநிறப் பழத்தை மிக மிக
அதிகமாக விரும்பி சாப்பிட்டதால்
மன்னனின் பற்களில் ப்ளுபெரியில்
காணப்பட்ட நீல நிறமானது படிந்து
விட்டது அதனால் மன்னருக்கு
"ப்ளுடுத்" என்ற பட்டப் பெயரே
நிலைத்து விட்டது. ப்ளுடுத் என்று
அழைக்கப்பட்ட இம் மன்னரே
நோர்வே,டென்மாக் போன்ற
நாடுகளின் போராட்ட குழுக்களை
ஒன்றிணைக்க பெரும் முயற்சி
செய்து பலனையும் கண்டவர்
அதனாலே கைத்தொலைபேசி
(மொபைல்),கணணி(கம்பியூட்டர்)
போன்ற தொழில்நுட்பங்களை
இணைக்கும் சாதனங்களுக்கும்
ப்ளுடுத் என்ற மன்னரின் பட்டப்
பெயரையே வைத்துவிட்டார்கள்.

சிந்தனைத்துளிகள் -64

அறிவாளிகளின் நட்பு, ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளம்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, November 10, 2011

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள் -3

(3)
எத்தனை மணி நேரம் படிக்கவேண்டும்?
இது தான் எல்லோருக்கும் வருகின்ற
முதலாவது சந்தேகமாகும்.நீங்க
தொடர்ந்து ஓரு மணித்தியாலங்கள்
படிக்கலாம்.ஆனால் திடீரென உங்கள்
உடைய மூளை சோர்வு அடைந்ததைப்
போல உங்களுக்கு தோன்றினால் 5 -10
நிமிடங்கள் ஓய்வு எடுத்து விட்டு
தொடர்ந்து படிக்கலாம் (எவ்வளவு
மணித்தியாலங்கள் என்பது அவரவர்கள்
உடைய திறமையையும் பாடத்திட்டம்,
பரீட்சை ஆகியவற்றை பொறுத்தது


மருத்துவகுறிப்புக்கள்-63

பக்கவிளைவு இல்லாத
பழசிகிச்சை -7

நாவல்பழம்


இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு,
இரத்த விருத்தியையும் உண்டாக்குகிறது
இப்பழத்தை உப்பு தண்ணீரில் ஊறவைத்து
சாப்பிட்டால் மிக மிக நல்லது அத்துடன்
இப்பழத்தை போல இதன் கொட்டையும்
மருத்துவ குணம் உடையது .நாவல்
பழத்தின் கொட்டையை காயவைத்து
அதனை அரைத்து கஷாயம் செய்து
குடித்து வந்தால் நீரிழிவு நோயை
கட்டுப்படுத்தலாம் .

பொன்மொழிகள் - 63

தாயின் அன்பிற்கு சமனாகவும் ,
நிகரானதும் இவ்வுலகில் எதுவுமில்லை.

பொது அறிவு-52

பூமியிலுள்ள மிகப் பெரிய சமுத்திரம்
பசுபிக் சமுத்திரம் ஆகும்

இதன் பரப்பு 166,241,700 கி .மீ ஆகும் 

ஆழம் சராசரி 3940 மீற்றர் ஆகும்   

தகவல் - 63

ஹிட்லர்(ஜேர்மனி ) ஓவியராக இருந்து
பின்பு சர்வாதிகாரியாக மாறினார் .

சிந்தனைத்துளிகள் -63

பேனா முனை, வாள் முனையை விடக் கூர்மையானது.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, November 9, 2011

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்-2

(2)
சில பாடங்களை நேரடியாகப் படிக்காமல்,
அதற்கு முந்தைய பாடம் அதாவது
ஜந்தாம் பாடம் என்றால்,நான்காம் பாடத்தை
மீண்டும் ஒருமுறை வாசித்து விட்டு
அடுத்த பாடத்துக்கு வந்தால் படிக்க படிக்க
எளிதாக இருக்கும் குழப்பங்கள் வராது .

மருத்துவகுறிப்புக்கள்-62

கால் ஆணி

சித்திரமூலம் (கொடிவேலி)அரைத்து
பூசும் போது சிலருக்கு அந்த
இடத்தில் புண் உண்டாகும் அப்படி
புண் ஏற்பட்டால் சிறிதளவு மஞ்சளை
எடுத்து ஒரு தேக்கரண்டி விளக்
கெண்ணையில் குழைத்து புண்
ஏற்பட்ட இடத்தில் பூசினால் புண்
மாறிவிடும்.

பொன்மொழிகள் - 62

உன் மனசாட்சிக்கும் கடவுளுக்கும்
நேர்மையாக இருப்பாயானால்
ஏனைய நல்ல குணங்கள் உன்னிடம்
தானாகவே வந்துவிடும்.

பொது அறிவு-51


அந்தாட்டிக்கா  கண்டத்தின் பரப்பளவு
14.239.000 சதுரக் கிலோ மீற்றர் ஆகும்

தகவல் - 62

இங்கிலாந்தில் உள்ள பிலடெல்பியாவில்
1815 ம் ஆண்டு முதல் புகையிரத விபத்து
ஏற்பட்டது இதில் 16 நபர்கள் இறந்தனர் .

சிந்தனைத்துளிகள் -62


வாழ்க்கை என்பது ஒருமுறைதான்.
இருக்கும்வரை அதை சிறப்பாக
 வாழ்ந்திட வேண்டும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, November 8, 2011

மருத்துவகுறிப்புக்கள்-61

கால் ஆணி

சித்திரமூலம் அல்லது கொடிவேலி
வேர்ப்பட்டையை ஒரு புளியங்
கொட்டை அளவு எடுத்து அரைத்து
இரவு படுக்க போகும் முன்பு கால்
ஆணி மேல் பூசி வந்தால் மூன்று
நாட்களில் குணமாகும்.

பொன்மொழிகள் - 61

செல்வம் இருக்கும் போது கர்வத்துடன்
நடக்காதே; ஏனென்றால் ஒருநாள் ஏழை
பணக்காரனாகவும்,பணக்காரனாகவும்
மாறக்கூடும்.

பொது அறிவு-50


ஆவுஸ்திரேலியாக் கண்டத்தின் பரப்பளவு
7.614.500 சதுரக் கிலோ மீற்றர் ஆகும்

தகவல் - 61

நியூசிலாந்தை சேர்ந்த எர்னால்ட்
டுத்ஃபேர்ட் என்பவர் தான் அணு
சக்தியின் தந்தை ஆவார் .

சிந்தனைத்துளிகள் -61

வெற்றியை தேடக்கூட நேரம்
இல்லாதவர்களுக்கே வெற்றி
வந்து சேரும்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, November 7, 2011

மருத்துவகுறிப்புக்கள்-60

கால் ஆணி - 2

அம்மன் பச்சரிசி செடியை முறித்தால்
முறித்த அந்த செடியில் இருந்து பால்
வழியும் அந்த பாலை எடுத்து கால்
ஆணி இருக்கும் இடத்தில் தினமும்
தடவி வந்தால் கால் ஆணி குணமாகும்

பொன்மொழிகள் - 60

எல்லாம் இறைவன் வகுத்தபடியே
நடக்கின்றன.

பொது அறிவு-49


ஜரோப்பாக் கண்டத்தின் பரப்பளவு
9.700.000 சதுரக் கிலோ மீற்றர் ஆகும்

தகவல் - 60

1804 ம் ஆண்டில் தான் முதன் முதலில்
நீராவி புகையிரத லோகோ மோட்டிவ்
உருவாக்கப்பட்டது இதனை ரிச்சர்ட்
ட்ரேவிதிக் என்பவர் உருவாக்கினார் .
அத்துடன் இது தான் உலகின்
பயணிகளுக்கான முதலாவது நீராவி
புகையிரத போக்குவரத்தாகும்

சிந்தனைத்துளிகள் -60

தேவையே, கண்டுபிடிப்பின் தொடக்கம்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, November 6, 2011

மருத்துவகுறிப்புக்கள்-59

கால் ஆணி - 1

சிறிதளவு மருதாணி இலை,சிறிய
துண்டு மஞ்சள் ஆகியவற்றை
சேர்த்து மைய மைய அரைத்து
அதன்பின்பு அதனை ஒரு நெல்லிக்
காயளவு எடுத்து இரவு படுக்க
போகும் போது கால் ஆணி உள்ள
இடத்தில் வைத்து கட்டவேண்டும்
இப்படியே பத்து நாட்கள் தினமும்
செய்யவேண்டும். இப்படி செய்தால்
கால் ஆணி மாறிவிடும் .

பொன்மொழிகள் - 59

நீ விரும்பியது உனக்கு கிடைக்கவில்லை
என்றால் இறைவன் உனக்கு கொடுத்து
உள்ளதை வைத்து மகிழ்ச்சியடை.

பொது அறிவு-48


தென் அமெரிக்கா  கண்டத்தின் பரப்பளவு
17.598.000 சதுரக் கிலோ மீற்றர் ஆகும்

தகவல் - 59

இந்தியாவில் உள்ள கோட்டைகளில்
மிகப் பெரிய கோட்டை கொல்
கொண்டான் கோட்டை ஆகும்

சிந்தனைத்துளிகள் -59

அறிவாளிகளின் நட்பு, ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளம்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, November 5, 2011

மருத்துவகுறிப்புக்கள்-58

நகச்சுத்து - 2

சிறிதளவு வேப்பிலை,சிறிய மஞ்சள்துண்டு
ஆகியவற்றை சேர்த்து அரைத்து நகச்சுத்து
வந்த இடத்தில் வைத்து கட்டினால் உரிய
பலன் கிடைக்கும் .

பொன்மொழிகள் - 58

புகழுக்கும் பெருமைக்கும் ஒரு
போதும் அடிபணியாதே .

பொது அறிவு-47


வடஅமெரிக்கா  கண்டத்தின் பரப்பளவு
24.320.000 சதுரக் கிலோ மீற்றர் ஆகும்

தகவல் - 58

இங்கிலாந்தில் உள்ள கோல்ப்ருக்டேல்
ஹொர்ஷே புகையிரத நிலையத்தில்
தான் முதன் முதலாக வார்ப்பு
இரும்பினால் செய்யப்பட்ட தண்ட
பாலங்களை பயன்படுத்தியது .

சிந்தனைத்துளிகள் -58

புத்தியில்லாதவர்கள் தங்களின் சுயத்தை இழக்கிறார்கள்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, November 4, 2011

மருத்துவகுறிப்புக்கள்-57

நகச்சுத்து - 1

மருதாணி இலையை அரைத்து
நகச்சுத்து உள்ள இடத்தில் வைத்து
மூன்று தடவை கட்டினால் நகச்சுத்து
மிக விரைவாக குணமடையும். 

பொன்மொழிகள் - 57

கடவுள் மீது பக்தியுள்ளவனுக்கு
அவன் உதவியின்றி தவிக்கும்
போது எதோ ஒரு வடிவில்
கடவுள் வந்து உதவுகிறார்.


பொது அறிவு-46


ஆபிரிக்கா  கண்டத்தின் பரப்பளவு
29.800.000 சதுரக் கிலோ மீற்றர் ஆகும்

தகவல் - 57

இந்திய புகையிரத வழிகள் 16
மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன

சிந்தனைத்துளிகள் -57

கெட்டுப்போன உணவை உண்ணாதே.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, November 3, 2011

பொது அறிவு-45

ஆசியாக் கண்டத்தின் பரப்பளவு
43.998.000 சதுரக் கிலோ மீற்றர் ஆகும் 

மருத்துவகுறிப்புக்கள்-56

பித்தவெடிப்பு - 3
அடுப்பில் ஒரு பாத்திரத்தை
வைத்து அதில் நன்னாரிவேர்
10 கிராம் தண்ணீர் - 1 டம்ளர்
ஆகியவற்றை போட்டு நன்றாக
கொதிக்கவைத்து (அரை டம்ளர்
ஆகும்வரை)வடிகட்டி அதனுடன்
பனங்கற்கண்டு சேர்த்து தினமும்
குடித்து வந்தால் பித்தவெடிப்பு
மாறிவிடும் (நன்னாரிவேரை 3 - 4
தடவை பயன்படுத்தலாம்).

பொன்மொழிகள் - 56


பணம் சம்பாதிப்பதிற்காக
ஒழுக்கத்தை விற்றுவிடாதே.
     (விவேகானந்தர்)

தகவல் - 56

1603 ம் ஆண்டில் தான் ஹட்டிங்டன்
ப்யூமோன்ட் அருகில் உள்ள வோலட்டன்
சுரங்கத்தின் புகையிரதப் போக்குவரத்தே
முதன் முதலில் நிலத்துக்கு மேலே
பயன்படுத்தப்பட்ட புகையிரத
போக்குவரத்தாகும்.

சிந்தனைத்துளிகள் -56

பழைய நாகரீகத்தைப் பார்த்து ஒவ்வொரு
தலைமுறையினரும் நகைப்பார்கள்,
ஆனால் புதியதையே பின்பற்றுகிறார்கள்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, November 2, 2011

பொது அறிவு-44

நோர்வே நாட்டை சேர்ந்த கிரிஸ்டென்ஜென்
என்பவர் அந்தாட்டிக் கண்டத்தில் முதன்
முதலில் காலடி எடுத்து வைத்தவர் ஆவார்  

மருத்துவகுறிப்புக்கள்-55

பித்தவெடிப்பு -2

வெள்ளை கரிசலாங்கண்ணி
இலையை தூளாக்கி அதனுடன்
ஒரு சிட்டிகை தேன் சேர்த்து
ஒரு மண்டலம் சாப்பிட்டு
வந்தால் பித்தவெடிப்பு
குணமாகும். 

பொன்மொழிகள் - 55

வாழ்க்கை வாழ்வதற்கே. ஆர்வமும் துடிப்பு மிக்கதே. ஆனால் ஒருபோதும் எந்த காரணத்திற்காகவும் ஒருவரின் கடந்தகாலத்தை ஆராய முற்படக்கூடாது. (எலனார் ரூஸ்வெல்ட்)

தகவல் - 55


இந்தியாவின் நீளமானதும் வற்றாததுமான
நதி கங்கை ஆகும்.

சிந்தனைத்துளிகள் -55

இன்று எவருக்காவது நன்மை செய்யுங்கள்

புதன்கிழமை வாழ்த்துக்கள்