முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Friday, August 17, 2012

பொன்மொழிகள் - 145

மக்களை நல்லவர்கள் என்றும் தீயவர்கள்
என்றும் பிரித்துப் பார்ப்பது ஒரு தவறு.
சிலர் உற்சாகமாவர்களாகவும் சிலர்
சோர்வடைந்தவர்களாகவும் மட்டுமே
 இருக்கிறார்கள்

சிந்தனைத்துளிகள் -146

வாழ்க்கை என்பது ஒருமுறைதான்.
இருக்கும்வரை அதை சிறப்பாக
வாழ்ந்திட வேண்டும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

Tuesday, June 12, 2012

சிந்தனைத்துளிகள் -145

எளிமையே சிறந்தது

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, June 4, 2012

சிந்தனைத்துளிகள் -144

முட்டாள்களும், ஆர்வம் மிகுந்தவர்களும்
தனக்குதான் எல்லாம் தெரியும் என்று
நினைப்பார்கள் ஆனால் புத்திசாலிகள்
எப்போதும் சந்தேகங்களுடன் இருப்பார்கள்

பொன்மொழிகள் - 144

உனக்கு நீயே எஜமான்.
(ஜேனிஸ் ஜாப்லின்)

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, May 31, 2012

மருத்துவகுறிப்புக்கள்-143


ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.


சிந்தனைத்துளிகள் -143

உன்னைப் போல் பிறரை நேசி.

பொன்மொழிகள் - 143

மன்னிப்பதை விட சிறந்த தண்டனை வேறு எதுவுமில்லை. (ஆஸ்கர் வில்டே)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, May 30, 2012

பொன்மொழிகள் - 142

நிறைகுடம் தளும்பாது

புதன்கிழமை வாழ்த்துக்கள்



Tuesday, May 29, 2012

மருத்துவகுறிப்புக்கள்-142


வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.


சிந்தனைத்துளிகள் -142

தோல்வி ஏற்படுமோ என்ற அச்சமே, வெற்றியின் தடைக்கல்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, May 28, 2012

மருத்துவகுறிப்புக்கள்-141


காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.


பொன்மொழிகள் - 141

சோம்பல் சுகமானது, ஆனால் மோசமானது, மகிழ்ச்சியாக இருக்க எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருங்கள்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


சிந்தனைத்துளிகள் -141

பொறுமை கடலிலும் பெரியது.

Saturday, May 19, 2012

சிந்தனைத்துளிகள் -140

மக்களை நல்லவர்கள் என்றும் தீயவர்கள்
என்றும் பிரித்துப் பார்ப்பது ஒரு தவறு
சிலர் உற்சாகமாவர்களாகவும் சிலர்
சோர்வடைந்தவர்களாகவும் மட்டுமே
இருக்கிறார்கள்

பொன்மொழிகள் - 140

மெதுவாக முன்னேறுவதில் பயம்
வேண்டாம்;நிலைத்து நிற்கவேண்டும்
என்பதில் .பயப்படுங்கள்

மருத்துவகுறிப்புக்கள்-140


மிளகானது மனிதனுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. அத்துடன் நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.


சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, May 18, 2012

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, May 16, 2012

பொன்மொழிகள் - 139

நகைச்சுவை இல்லாத வாழ்வு எதற்கும் பயனற்றது

மருத்துவகுறிப்புக்கள்-139


உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கல்சியம், இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற விற்றமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.


சிந்தனைத்துளிகள் -139

மற்றவர்களை சந்தோஷப்படுத்த இரக்கமுள்ளவராய் இருங்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கவும் அதையே செய்யுங்கள்

மருத்துவகுறிப்புக்கள்-138


மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum) 

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.


பொன்மொழிகள் - 138

காலம் பொன் போன்றது

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, March 31, 2012

பொன்மொழிகள் - 137

மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உங்களைத் தொலைப்பதே உங்களை அடையாளங் கண்டுகொள்ள சிறந்த வழி

மருத்துவகுறிப்புக்கள்-137

தூதுவளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100 மி.லி ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமடையும்.

சிந்தனைத்துளிகள் -138

நடனம் என்பது உயிரின் மொழி

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, March 30, 2012

பொன்மொழிகள் - 136

அறிவினால் ஏற்படும் சிக்கல்களுக்கு,
அறியாமையினால் தீர்வு ஏற்படுத்த
முடியாது.
(இசாக் அசிமோவ்)

மருத்துவகுறிப்புக்கள்-136

தூதுவளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம் தூதுவளை தோசை சாப்பிடலாம் தூதுவளை கசாயம் குடிக்கலாம் தூதுவளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

சிந்தனைத்துளிகள் -137

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, March 29, 2012

பொன்மொழிகள் - 135

பொறுமை கடலிலும் பெரியது.

மருத்துவகுறிப்புக்கள்-135

துதுவளை கண்டங்கத்திரி பற்படாகம் விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8-ல் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.

சிந்தனைத்துளிகள் -136

கோல்களும் கற்களும் உங்களைக்
காயப்படுத்தக்கூடும். ஆனால்
சொற்கள் உங்களை ஒன்றும்
செய்யாது.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, March 28, 2012

பொன்மொழிகள் - 134

உங்களுடைய தவறுகளை கையாளுவதைப்
போலவே மற்றவர்களுடையதையும்
மென்மையாக கையாளுங்கள்

மருத்துவகுறிப்புக்கள்-134

தினமும் (45 நாட்களுக்கு)10 துதுவளை பூவை போட்டு காய்ச்சிய பால், சர்க்கரைக் கூட்டி ஆகியவற்றை ஒரு மண்டலம் பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.

சிந்தனைத்துளிகள் -135


இலவசமாக எப்போதும் எதுவும் கிடைக்காது.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, March 27, 2012

பொன்மொழிகள் - 133

அறிந்தவனோ அறியாமையை இழக்கிறான்.
அறியாதவனோ அறியாமையை ஏற்கிறான்.

மருத்துவகுறிப்புக்கள்-133

ஆஸ்துமா மூச்சுத் திணறலில் துதுவளையின் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்

சிந்தனைத்துளிகள் -134


உங்களை நன்கு அறிந்தவரும், உங்களிடம்
அதையே விரும்புவருமே நண்பர் ஆவார்

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Monday, March 26, 2012

பொன்மொழிகள் - 132

இரு கை தட்டினால்தான் ஓசை வரும்.

மருத்துவகுறிப்புக்கள்-132

துதுவளையின் வேர், இலை, பூ, காய் ஆகியவற்றை 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி ஆகியவகை தீரும்.

சிந்தனைத்துளிகள் -133

ஆசைப்படுவது மட்டுமே பயனை அடைவதற்கு போதாது.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, March 25, 2012

பொன்மொழிகள் - 131

அறிந்தவனோ அறியாமையை இழக்கிறான்
அறியாதவனோ அறியாமையை ஏற்கிறான்

மருத்துவகுறிப்புக்கள்-131

தூதுவளையின் காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.

சிந்தனைத்துளிகள் -132

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, March 24, 2012

பொன்மொழிகள் - 130

தன்னால் செய்ய முடியாதது என்று
நினைப்பதை செய்து காட்டுபவனே
முழுமைபெற்ற மனிதன்
(எலனார் ரூஸ்வெல்ட்)

மருத்துவகுறிப்புக்கள்-130

தூதுவளை இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.

சிந்தனைத்துளிகள் -131

நீங்கள் நேசிப்பதைச் செய்யுங்கள். செய்வதை நேசியுங்கள்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, March 23, 2012

பொன்மொழிகள் - 129

வேலை செய்யவும், அன்பு செலுத்தவும்
எவ்வளவோ நேரம் இருக்கும் இடத்தில்
சலிப்பிற்கு இடமில்லை
(கோகோ சேனல்)

மருத்துவகுறிப்புக்கள்-129

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.

சிந்தனைத்துளிகள் -130

பொறுமை காத்தலே நம்பிக்கையின் கலை

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, March 22, 2012

பொன்மொழிகள் - 128

ஒவ்வொரு தீமைக்குள்ளும், ஒரு நன்மை உண்டு.

மருத்துவகுறிப்புக்கள்-128

தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.

தகவல் - 128

மோனலிசா ஓவியம் இடது 



கையால் வரையப்பட்டது.

சிந்தனைத்துளிகள் -129

தக்க நேரத்தில் அமைதி காப்பது பேசுவதைக்காட்டிலும் மிக்க நன்று

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, March 21, 2012

மருத்துவகுறிப்புக்கள்-127

தூதுவளை இலை கோழையகற்றும், உடல் தேற்றிக் காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.

தகவல் - 127


மனிதன் ஒருவன் தான் சிரிக்கும்
தகுதி பெற்றவன். அதே நேரம்
பிறர் பார்த்து சிரிக்கத் தகுதி
நிலை பெற்றவனும் மனிதன்
தான் .

பொன்மொழிகள் - 127

கவலையற்ற மனமே, நீண்ட ஆயுளின் அஸ்திவாரம்.

சிந்தனைத்துளிகள் -128


நீங்கள் பயப்படவில்லை அல்லது 
அவமானப்படவில்லை அல்லது 
புண்படவில்லை என்றால், நீங்கள் 
இதுவரை எதையும் முயற்சிக்கவில்லை
என்று பொருள்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, March 20, 2012

மருத்துவகுறிப்புக்கள்-126

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

தகவல் - 126


  1. இலங்கையின் பரப்பளவு யாது?
    65610 சதுர கிலோமீற்றர்
  2. இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
    சல்மன் குர்ஷித்
  3. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
    பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
  4. சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் யார்?
    ரிஸானா நபீக்
  5. ஜனாதிபதியின் செயலாளர் யார்?
    லலித் வீரதுங்க
  6. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் யார்?
    வீ.ஆனந்தசங்கரி
  7. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் யார்?
    குமாரமல்லவ ஆராய்ச்சி
  8. கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் யார்?
    ஆரியவதி கலப்பதி
  9. அமெரிக்காவின் தலைமை நீதிபதி யார்?
    ஜோன் ரொபோட்ஸின்
  10. அமெரிக்காவின் உப ஜனாதிபதி யார்?
    ஜோபிடன்
  11. சிரிய நாட்டின் தலைநகரம் எது?
    டமஸ்கஸ்

சிந்தனைத்துளிகள் -127


ஏதேனும் ஒரு துறையில் கடுமையாக
உழைத்து சாதிக்க வேண்டும்

பொன்மொழிகள் - 126

பேசிய வார்த்தைகளையும், ஆற்றில்
வீசிய கற்களையும் திரும்பப் பெற
முடியாது.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Monday, March 19, 2012

பொன்மொழிகள் - 125

அறிந்தவனோ அறியாமையை
இழக்கிறான். அறியாதவனோ
அறியாமையை ஏற்கிறான்.

மருத்துவகுறிப்புக்கள்-125

விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

.

தகவல் - 125


காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடைபெறுகின்றன

சிந்தனைத்துளிகள் -126


திட்டமிடலுக்கு செலவு செய்யப்படும் 
ஒரு நிமிடம். ஒரு மணிநேரத்தை 
மிச்சப்படுத்தக்கூடும்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, March 18, 2012

மருத்துவகுறிப்புக்கள்-124

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

தகவல் - 124

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர்லாதம்
ஷோல்ஸ் என்பவர் 1867ம் ஆண்டு இருமொழி
தட்டச்சு இயந்திரத்தை முதன்முதலில்
அறிமுகப்படுத்தினார்

சிந்தனைத்துளிகள் -125


முன்நோக்கி செல்லவிருக்கும் 
சாலையின் வழியை, திரும்பி 
வருபவர்களிடம் கேளுங்கள்

பொன்மொழிகள் - 124

தன்னால் செய்ய முடியாதது என்று
நினைப்பதை செய்து காட்டுபவனே
முழுமைபெற்ற மனிதன்
(எலனார் ரூஸ்வெல்ட்)

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, March 17, 2012

மருத்துவகுறிப்புக்கள்-123

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

தகவல் - 123


மாயாஜால சாகசத்திற்கு வழங்கப்படும்
உயர்தர விருது மெர்வின் விருதாகும்

சிந்தனைத்துளிகள் -124

சிறுதுளி பெருவெள்ளம். 

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


பொன்மொழிகள் - 123


பாவியார் போன இடமெல்லாம்
பள்ளமும் மேடும்.
(டக்ளஸ் ஆடம்ஸ்)

Friday, March 16, 2012

மருத்துவகுறிப்புக்கள்-122

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.


பொன்மொழிகள் - 122

அறிவினால் ஏற்படும் சிக்கல்களுக்கு
அறியாமையினால் தீர்வு ஏற்படுத்த
முடியாது
(இசாக் அசிமோவ்)

தகவல் - 122

நோபல்,மகசே,பாரதரத்தினா ஆகிய 
மூன்று உயரிய பரிசுகளை பெற்ற 
ஒரே நபர் அன்னை திரேசா ஆவார் .

சிந்தனைத்துளிகள் -123

வாழ்க்கை என்பது ஒருமுறைதான். 
இருக்கும்வரை அதை சிறப்பாக 
வாழ்ந்திட வேண்டும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, March 14, 2012

மருத்துவகுறிப்புக்கள்-121

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

பொன்மொழிகள் - 121

உரிய வயது படிப்பினையே, ஒருவரின்
நிலைத்த வாழ்விற்கான ஏணிப்படிகள்.
(ஹென்றி புருக்ஸ் ஆடம்ஸ்) 

தகவல் - 121

சக்கரம் இல்லாத புகையிரதம்
ஜேர்மன் நாட்டில் உள்ளது.

சிந்தனைத்துளிகள் -122

தொடர்ந்து, ஆனால் மெதுவாக 
வளர்ந்துவரும் ஒருவரை, 
வேகத்தைக் குறை சொல்லி 
ஊக்கத்தைக் குறைக்காதீர்கள்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, March 13, 2012

தகவல் - 120

வட அத்திலாந்திக் ஒப்பந்த நிறுவனம்
பெல்ஜியத்தில் அமைந்துள்ளது.

சிந்தனைத்துளிகள் -121

கவலையற்ற மனமே, நீண்ட ஆயுளின் அஸ்திவாரம்.

பொன்மொழிகள் - 120


மின்னுவதெல்லாம் பொன்னல்ல
(ஷேக்ஸ்பியர்)

மருத்துவகுறிப்புக்கள்-120

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

பொன்மொழிகள் - 119

வார்த்தை வெளிப்படும் போது அங்கே
தோற்றத்திற்கு வேலை இல்லை
(ஆஸ்கர் வைல்டு)

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, March 11, 2012

மருத்துவகுறிப்புக்கள்-119

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

தகவல் -119

இங்கிலாந்தில் உள்ள மிகப்
பழைய சர்வகலாசாலையின்
பெயர் ஒக்ஸ்போர்ட் ஆகும்.

சிந்தனைத்துளிகள் -120

கல்வி கற்காதவன் களர் நிலத்திற்கு ஒப்பாவான்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, March 10, 2012

மருத்துவகுறிப்புக்கள்-118

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

பொன்மொழிகள் - 118

பாவியார் போன இடமெல்லாம் பள்ளமும்
மேடும்.
(டக்ளஸ் ஆடம்ஸ்)

தகவல் - 118

பொருளியலின் தந்தை அடம்ஸ்மித்
ஆவார் .

சிந்தனைத்துளிகள் -119

கல்வி கற்காதவன் களர் நிலத்திற்கு ஒப்பாவான்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, March 9, 2012

மருத்துவகுறிப்புக்கள்-117

பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.



பொன்மொழிகள் - 117

உனக்கு நீயே எஜமான்
(ஜேனிஸ் ஜாப்லின்)

தகவல் - 117

உலகிலேயே மிகமிக வறியநாடு
கம்போடியா ஆகும்.

சிந்தனைத்துளிகள் -118

ஏதேனும் தவறு செய்துவிடுவோமோ 
என்று எப்போதும் பயந்து கொண்டிருப்பதே 
நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறாகும்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, February 29, 2012

பொன்மொழிகள் - 116

கவலையற்ற மனமே, நீண்ட
ஆயுளின் அஸ்திவாரம்.

மருத்துவகுறிப்புக்கள்-116


வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

தகவல் - 116

வளர்ந்த நீர்நாயில் இருக்கும்
பற்களின் எண்ணிக்கை 36 
ஆகும் .

புதன்கிழமை வாழ்த்துக்கள்


சிந்தனைத்துளிகள் -117

புகழோடு வாழ்வதே வாழ்க்கை

Tuesday, February 28, 2012

மருத்துவகுறிப்புக்கள்-115


வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.


தகவல் - 115

லெபனான் நாட்டின் நாணயத்தின்
பெயர் லீரா ஆகும் .

பொன்மொழிகள் - 115

இன்றைய நாளை சிறப்பான நாளாக
மாற்றிக்கொள்வது உங்களிடமே
உள்ளது

சிந்தனைத்துளிகள் -116

கோல்களும் கற்களும் உங்களைக் 
காயப்படுத்தக்கூடும். ஆனால் 
சொற்கள் உங்களை ஒன்றும் 
செய்யாது.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, February 27, 2012

பொன்மொழிகள் - 114

உனக்கு நீயே எஜமான்
(ஜேனிஸ் ஜாப்லின்)

மருத்துவகுறிப்புக்கள்-114


வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.


தகவல் - 114

மூலகங்களை அட்டம விதிப்படி
ஒழுங்குபடுத்திய விஞ்ஞானி
நியூலந் ஆவார் .

சிந்தனைத்துளிகள் -115

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, February 26, 2012

மருத்துவகுறிப்புக்கள்-113


கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.


பொன்மொழிகள் - 113

நீங்கள் நேசிப்பதைச் செய்யுங்கள்.
 செய்வதை நேசியுங்கள்.

தகவல் - 113

கடற்கரையில் உள்ள மணலை
சுத்தம் செய்யப்பயன்படும்
கருவியின் பெயர் பீச்கோம்பர்
ஆகும்

சிந்தனைத்துளிகள் -114

உங்களுடைய தவறுகளை 
கையாளுவதைப் போலவே 
மற்றவர்களுடையதையும் 
மென்மையாக கையாளுங்கள்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, February 25, 2012

சிந்தனைத்துளிகள் -113

பழமொழிகளுக்கு எப்போதும்
 எதிர் பழமொழிகளும் இருக்கின்றன.

Tuesday, January 31, 2012

மருத்துவகுறிப்புக்கள்-112


குட்டநோய் பதினெட்டும் தீர்வதற்கு

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்.


பொன்மொழிகள் - 112

பழமொழிகளுக்கு எப்போதும்
எதிர் பழமொழிகளும் இருக்கின்றன.

சிந்தனைத்துளிகள் -112


வாழ்க்கை என்பது ஒருமுறைதான். 
இருக்கும்வரை அதை சிறப்பாக 
வாழ்ந்திட வேண்டும்.

தகவல் - 112

அட்லாந்திக் சமுத்திரத்தில் உருவாகும் 
புயலை ஹரிக்கேன் என அழைப்பார்கள் .

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்