முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Saturday, December 31, 2011

மருத்துவகுறிப்புக்கள்-111


காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்.(அகத்தியர்).



பொன்மொழிகள் - 111

இருப்பதை விட்டு பறப்பதற்கு 
ஆசைப்படக் கூடாது.

தகவல் - 111

பிரிட்டானிக்கா என்சைக்கிளோபீடியா
முதன் முதலில் 1788 ம் ஆண்டில்
வெளியானது.

சிந்தனைத்துளிகள் -111

மாற்றம் என்பது பாலத்தின் அடியில் 
செல்லும் நீரைப் போன்றது

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, December 30, 2011

சிந்தனைத்துளிகள் -110

ஒன்றை இழந்தால்தான், 
மற்றொன்று கிடைக்கும்.

மருத்துவகுறிப்புக்கள்-110


நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.


தகவல் - 110

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி
மேரி கியூரி அம்மையார் .

பொன்மொழிகள் - 110

கண்ணுக்கு கண் என்று பழிவாங்கத் 
தொடங்கினால் உலகத்தில் குருடர்கள் 
மட்டுமே இருப்பார்கள்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, December 29, 2011

மருத்துவகுறிப்புக்கள்-109


எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர் நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.


சிந்தனைத்துளிகள் -109

ஒருவன் சிரிக்காத நாள், அவன் 
வாழத் தவறிய நாளிற்குச் சமம்

தகவல் - 109

விமானவிபத்துக்கள்  எப்படி ஏற்பட்டது
என்ற தகவல்களை  அறிய உதவுகின்ற
கறுப்பு பெட்டி முதன் முதலாக 1960 ம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பொன்மொழிகள் - 109

சிந்திப்பதைவிட செயல்படுவதே சிறப்பு.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, December 28, 2011

மருத்துவகுறிப்புக்கள்-108


வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.


பொன்மொழிகள் - 108

கடந்த காலத்திற்குச் சென்று புதிய 
தொடக்கத்தை யாராலும் ஏற்படுத்த 
முடியாது, ஆனால் இன்றைய தினத்தை 
தொடங்கி புதியதொரு முடிவை யார்
வேண்டுமானாலும் கொடுக்கலாம்

தகவல் - 108


கி.மு 776 ம் ஆண்டு கிரேக்க நாட்டில் தான் 
முதன் முறையாக ஒலிம்பிக் விளையாட்டு 
ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன்  கிரேக்க
மக்களுக்காக  மட்டும் தொடங்கிய இந்த
விளையாட்டின் புகழ் உலகெங்கும்
பரவியது .

சிந்தனைத்துளிகள் -108

வேலையைத் தவிர்த்த மற்ற 
விஷயங்களிலும் மகிழ்ச்சியைப்
 பெற்றிடுங்கள் அல்லது உங்களுக்கு 
மகிழ்ச்சி என்றால் என்ன என்றே 
தெரியாமல் போய்விடும்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, December 27, 2011

மருத்துவகுறிப்புக்கள்-107


வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால்  மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.


பொன்மொழிகள் - 107

நல்ல ஆரோக்கியமும், நடந்ததை 
மறந்துவிடும் மனோபாவவுமே 
மகிழ்ச்சியைத் தரும்

தகவல் - 107

இந்தியாவின் முதலாவது பெண் வெளியுறவு
செயலாளர் சோபிகா ஜயர் . 

சிந்தனைத்துளிகள் -107



புகழோடு வாழ்வதே வாழ்க்கை

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, December 26, 2011

மருத்துவகுறிப்புக்கள்-106


வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.


பொன்மொழிகள் - 106

முட்டாள்களும், ஆர்வம் மிகுந்தவர்களும் 
தனக்குதான் எல்லாம் தெரியும் என்று 
நினைப்பார்கள் ஆனால் புத்திசாலிகள் 
எப்போதும் சந்தேகங்களுடன் இருப்பார்கள்

தகவல் - 106


காற்றில் சார்ஜ் ஆகும் பற்றரி 
கண்டுபிடிப்பு - 1-2

தொடர்ச்சி 

அத்துடன் அது பற்றரியின் காபனில்
செயல்பட்டு சக்தியை அதிகரிக்கும் .
சாதாரண பற்றரிகளை விட இது எடை
குறைவானது.சாதாரண பற்றரிகளில்
இரசாயப்பொருட்களாக லித்தியம்,
கோபால்ட் ஒக்சைட் ஆகியவை
இருக்கும் இவற்றுக்குப் பதிலாக
இந்த பற்றரியில் போராஸ் காபன்
இடம் பெற்றுள்ளது அத்துடன்
மற்றைய பற்றரிகளை விட மிகச்
சிறிதானதும்எடை குறைந்ததுமான
இதை கைத்தொலைபேசி(செல்போன்)
மடக்கு கணணி(லப்டப்)உட்பட பல
இலக்ரோனிக் சாதனங்களில் பயன்
படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள்
தெரிவித்து உள்ளனர்.     

சிந்தனைத்துளிகள் -106

நடப்பதெல்லாம் நன்மைக்கே.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, December 25, 2011

மருத்துவகுறிப்புக்கள்-105


வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.


பொன்மொழிகள் - 105

எதையும் செய்வதற்கு முன் இருமுறை யோசி.

தகவல் - 105


1999 ம் ஆண்டு  இந்தியாவில் உள்ள 
பெரம்பலூர் என்ற இடத்தில் முதன் 
முதலாக  முழுவதும் எவர்சில்வரினால்  
 புகையிரதம்   உருவாக்கப்பட்டது.

சிந்தனைத்துளிகள் -105

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
 திறமை உள்ளது - ஆனால் சிலர்
 அதை வெளிப்படுத்துவதே இல்லை

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, December 24, 2011

மருத்துவகுறிப்புக்கள்-104


நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.


பொன்மொழிகள் - 104

அறிவாளிகளின் நட்பு, ஆரோக்கியமான 
வாழ்வின் அடித்தளம்.

தகவல் - 104

காற்றில் சார்ஜ் ஆகும் பற்றரி 

கண்டுபிடிப்பு - 1 

உலகிலே முதன் முறையாக காற்றின்
மூலம் சார்ஜ் ஆகக்கூடிய பற்றறியை
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர் .அத்துடன் இதற்கு
"ஸ்டைர்" என்ற பெயரிட்டுள்ளனர்.இந்த
பற்றரி மீது அமைக்கப்பட்டுள்ள வலை
போன்ற பகுதி வழியாக காற்றிலுள்ள
ஒட்சிசன் பற்றரிக்குள் கிரகிக்கப்படும் .

சிந்தனைத்துளிகள் -104

பேனா முனை, வாள் முனையை விடக் கூர்மையானது.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, December 23, 2011

மருத்துவகுறிப்புக்கள்-103


வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.


பொன்மொழிகள் - 103

நாட்கள் நீளமானவை, ஆண்டுகள் 
குறைவானவை 

சிந்தனைத்துளிகள் -103

நாம் நினைப்பது எதுவோ, அதுவாகவே
 ஆகிறோம் (உங்களை ஒரு சூப்பர் 
கதாநாயகனாக நினைத்துக்கொண்டு 
பறக்க முயற்சிக்காதீர்கள்)

தகவல் - 103

இத்தாலியில் உள்ள பீசா கோபுரத்தில் 
மொத்தம் 294 படிக்கட்டுக்கல் உள்ளன

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, December 22, 2011

மருத்துவகுறிப்புக்கள்-102


வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.


பொன்மொழிகள் - 102

பணியில் ஏற்படும் மகிழ்ச்சியின் ரகசியம் 
ஒரே சொல்லில் உள்ளது - வல்லுநர்தன்மை.
 ஒரு விஷயத்தை எப்படிச் சிறப்பாக செய்ய 
வேண்டும் என்பதை அறிய, அதை ஒவ்வொரு
வரும் மகிழ்ந்து செய்ய வேண்டும்

பொது அறிவு-92

மேசை உப்பு - அயடின்

சிந்தனைத்துளிகள் -102

மாற்றம் என்பது வாழ்க்கையின் விதி

தகவல் - 102

இந்தியாவில் உள்ள மெட்ராஸ் என்னும் 
நகரம் பிரான்சிஸ்டே என்பவரால் 
உருவாக்கப்பட்டது  

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, December 21, 2011

பொது அறிவு-91

அமிலங்களின் சுவை புளிப்புசுவை ஆகும்

மருத்துவகுறிப்புக்கள்-101


வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.


பொன்மொழிகள் - 101

மற்றவர்கள் உங்களை நேசிக்க 
வேண்டுமென்றால், மற்றவர்களை
 நீங்கள் முதலில் நேசிக்கவேண்டும்

சிந்தனைத்துளிகள் -101

அமைதியும் ஆனந்தமும் நமக்குள்ளே 
உள்ளது, அதை வெளியில் சென்று தேட
வேண்டிய அவசியம் இல்லை

தகவல் - 101


பந்தயக் குதிரைகளை ஓட்டும் ஜாக்கிகளில் 
பெண்கள் வேலைசெய்வது   மிகமிக ஆபூர்வம் 
அதற்கு காரணம் ஆண்கள் மட்டுமே  அந்த 
வேலையை செய்வார்கள் ஆனால் ஜூலி க்ரோன்
என்ற அமெரிக்க பெண்மணி ஜாக்கி பந்தயக் 
குதிரைகளை ஓட்டுவதில் சிறந்த சாதனையாளர் 
ஆவார்.அத்துடன் இவரை குதிரைகள் தூக்கி 
வீசியதில் நான்கு தடவைகள் கால் முறிவும்,
இடுப்பு எலும்புகள் உடைபட்ட போதும் இவர் 
அவற்றைப் பற்றி சிறிதும் கவலைப்படாது 
தனது விடாமுயற்சியால்குதிரையோட்டி 
124 அரிய பரிசில்களை வென்ற சாதனையாளர் 
ஆவார்.  

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Monday, December 19, 2011

மருத்துவகுறிப்புக்கள்-100


வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.


பொன்மொழிகள் - 100

நேரந்தவறாமை சலித்துப்போனவர்களின் 
கொள்கை (ஆனால் வேலைக்கான நேர்
காணல் இருக்கும்போது, நேரத்திற்கு 
செல்லுங்கள்)

பொது அறிவு-90

குளிர்பானத்தில் இருந்து வெளிவரும் நீர்க்குமிழ் நைதரசன் வாயு ஆகும்

சிந்தனைத்துளிகள் -100

நீங்கள் மற்றவர்களுக்கு தரும் சிறந்த 
பரிசு அரவணைப்பு: அதைச் செய்தால் 
யாருக்கும் எந்த ஆட்சேபனையும் 
இருக்காது

தகவல் - 100


நோபல்,மகசே,பாரதரத்தினா ஆகிய 
மூன்று உயரிய பரிசுகளை பெற்ற 
ஒரே நபர் அன்னை திரேசா ஆவார் .

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, December 18, 2011

மருத்துவகுறிப்புக்கள்-99


வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.


பொது அறிவு-89

வெங்காயத்தை குறிக்கும் ஸ்வீபிள் என்ற பெயர் ஜேர்மனிய மொழியில் இருந்து உருவானது

பொன்மொழிகள் - 99

புகழோடு வாழ்வதே வாழ்க்கை

தகவல் - 99


சக்கரம் இல்லாத புகையிரதம்
ஜேர்மன் நாட்டில் உள்ளது.

சிந்தனைத்துளிகள் -99

ஒருபோதும் சாக்குப் போக்கு சொல்லாதீர்கள். 
உங்கள் நண்பர்களிடம் அது தேவையில்லை. 
உங்கள் அதிகாரிகள் அதை நம்ப மாட்டார்கள். 
(ஜான் உடன்)

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, December 17, 2011

மருத்துவகுறிப்புக்கள்-98


50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.


பொது அறிவு-88

வெங்காயத்தை குறிக்கும் ஆனியன் என்ற பெயர் ஸ்பானிய மொழியில் இருந்து உருவானது 

பொன்மொழிகள் - 98

மற்றவர்களுக்கு சேவை செய்வதில் 
உங்களைத் தொலைப்பதே உங்களை 
அடையாளங் கண்டுகொள்ள சிறந்த 
வழி

சிந்தனைத்துளிகள் -98

அமைதியைப் பற்றி பேசினால் மட்டும்
 போதாது. அதை ஒருவர் நம்ப வேண்டும். 
அப்படி நம்பினால் மட்டும் போதாது. 
அதை அவர் செயல்படுத்த வேண்டும்.
(எலனார் ரூஸ்வெல்ட்)

தகவல் - 98

வட அத்திலாந்திக் ஒப்பந்த நிறுவனம்
பெல்ஜியத்தில் அமைந்துள்ளது.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, December 15, 2011

பொது அறிவு-87

வெடிபொருட்களை (Dynamite) தயாரிக்க கச்சான் (நிலக்கடலை) பயன்படுகிறது

மருத்துவகுறிப்புக்கள்-97


3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.


பொன்மொழிகள் - 97

தோல்வியுற்ற காதலுக்கு நட்பே ஆறுதல்.
 (ஜேன் ஆஸ்டின்)

சிந்தனைத்துளிகள் -97

மற்றவர்கள் பேசும்போது, முழுவதும் கவனிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் அதைச் செய்வதில்லை

தகவல் - 97

இங்கிலாந்தில் உள்ள மிகப்
பழைய சர்வகலாசாலையின்
பெயர் ஒக்ஸ்போர்ட் ஆகும்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, December 14, 2011

மருத்துவகுறிப்புக்கள்-96


5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.


பொன்மொழிகள் - 96

வெற்றி பெறுவது திறமையை வெளிக்கொணரும்.
 நல்ல எண்ணங்களோ வாழ்க்கையை வளமாக்கும். 
(ஜான் உடன்)

பொது அறிவு-86

17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலக நாடுகளில் இன்ஸ்டண்ட் கோப்பி அறிமுகமானது

சிந்தனைத்துளிகள் -96

தன்னம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு
 வாய்ப்பிலும் தோல்வி அடைகிறான்;
 தன்னம்பிக்கை உள்ளவன் ஒவ்வொரு 
தோல்வியிலும் வாய்ப்பைப் பெறுகிறான்

தகவல் - 96

பொருளியலின் தந்தை அடம்ஸ்மித்
ஆவார் .

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Monday, December 12, 2011

பொது அறிவு-85

பாட்டா நிறுவனம் முதன் முதலில் எங்கே எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
செக்கோஸ்லோவேக்கியா,1829ம் ஆண்டு

மருத்துவகுறிப்புக்கள்-95


உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் தீரும்.


பொன்மொழிகள் - 95

விதியை மதியால் வெல்

தகவல் - 95


உலகிலேயே மிகமிக வறியநாடு
கம்போடியா ஆகும்.

சிந்தனைத்துளிகள் -95

ஒருவன் சிரிக்காத நாள், அவன் 
வாழத் தவறிய நாளிற்குச் சமம்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, December 11, 2011

பொது அறிவு-84

இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில்
அதிகமான தாலுக்காகளை
கொண்ட மாவட்டம் எது?
திருநெல்வேலி (11தாலுக்கா)

மருத்துவகுறிப்புக்கள்-94


வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.


பொன்மொழிகள் - 94

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.

சிந்தனைத்துளிகள்-94

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு
ஏற்றபடி இல்லை என்றால், ஒரு 
புதிய வாழ்க்கையை உங்களுக்
கென நீங்களே எழுதுங்கள்.

தகவல் - 94

வளர்ந்த நீர்நாயில் இருக்கும்
பற்களின் எண்ணிக்கை 36 
ஆகும் .

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, December 10, 2011

மருத்துவகுறிப்புக்கள்-93


வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.


பொன்மொழிகள் - 93

ஒவ்வொரு தீமைக்குள்ளும், 
ஒரு நன்மை உண்டு.

பொது அறிவு-83

உலகின் மிகப் பெரிய நூலகம் மொஸ்கோவில்
உள்ள லெனின் நூலகம் ஆகும்

சிந்தனைத்துளிகள் -93

கடந்துபோகாத கனவுகள் இளமையில் இருக்கும், எதுவும் நிகழாத நினைவுகள் முதுமையில் இருக்கும்

தகவல் - 93

லெபனான் நாட்டின் நாணயத்தின்
பெயர் லீரா ஆகும் .

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, December 9, 2011

மருத்துவகுறிப்புக்கள்-92


வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.


பொன்மொழிகள் -92

முயற்சி செய்து தோற்கலாம்,
ஆனால் முயற்சி செய்வதில் 
தோற்கக்கூடாது

பொது அறிவு-82

கனடாவிற்கு அருகில் அமைந்துள்ள 
அமெரிக்க நகரம் டெட்ராய்ட் ஆகும் 

சிந்தனைத்துளிகள் -92

மாற்றுவழியை யோசிக்கும் மனதிருந்தால், முதுமையிலும் இனிமை காணலாம்

தகவல் - 92

மூலகங்களை அட்டம விதிப்படி
ஒழுங்குபடுத்திய விஞ்ஞானி
நியூலந் ஆவார் .

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, December 8, 2011

மருத்துவகுறிப்புக்கள்-91


வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.


பொன்மொழிகள் - 91

கேட்டுத் தெரிந்துகொள்பவன் 
அப்போதைக்கு முட்டாள், 
கேட்காதவன் எப்போதும் 
முட்டாளே

சிந்தனைத்துளிகள் -91

பந்திக்கு முந்து. படைக்கு பிந்து 

தகவல் - 91

கடற்கரையில் உள்ள மணலை
சுத்தம் செய்யப்பயன்படும்
கருவியின் பெயர் பீச்கோம்பர்
ஆகும்

பொது அறிவு-81

இந்தியாவிலுள்ள கோனார்க் கோயில்
கங்கர் வம்சத்தவரால் கட்டப்பட்டது

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, December 7, 2011

மருத்துவகுறிப்புக்கள்-90


வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.


பொன்மொழிகள் - 90

கலைத்திறன் மிக்க ஒரு பொருளுக்கான 
வெற்றியின் ரகசியம் அதை உருவாக்கிய 
விதத்தை பலரால் கண்டுபிடிக்க முடியாமல் 
இருப்பதுதான்

பொது அறிவு-80


சென்லோறன்ஸ் நதி கனடாவில்
உள்ளது இதன் நீளம் 3058 கிலோ
மீற்றர் ஆகும்


சிந்தனைத்துளிகள் -90

மனம் விரும்பும் இடமே நல்ல இடம்.

தகவல் - 90

அட்லாந்திக் சமுத்திரத்தில் உருவாகும் 
புயலை ஹரிக்கேன் என அழைப்பார்கள் .

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, December 6, 2011

மருத்துவகுறிப்புக்கள்-89


வேம்பு கோழையகற்றுதல்,சிறுநீர்பெருக்குதல்,
வீக்கம்,கட்டிகளைக்கரைத்தல்,வாதம்,மஞ்சள்
காமாலை,காச்சல், சுவையின்மை,பித்தம்,
கபம்,நீரிழிவு,தோல்வியாதிகள்,பூச்சிக்
கொல்லியாகவும் பயன்படுகிறது.

பொன்மொழிகள் - 89

ஒவ்வொரு தீமைக்குள்ளும், 
ஒரு நன்மை உண்டு.

சிந்தனைத்துளிகள் -89

முயற்சி செய்து தோற்கலாம், ஆனால் முயற்சி செய்வதில் தோற்கக்கூடாது

பொது அறிவு-79


வொல்கா நதி ஜரோப்பாவில்
உள்ளது இதன் நீளம் 3687 கிலோ
மீற்றர் ஆகும்

தகவல் - 89

பிரிட்டானிக்கா என்சைக்கிளோபீடியா
முதன் முதலில் 1788 ம் ஆண்டில்
வெளியானது.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


பொது அறிவு-78


மீக்கொங் நதி தென் ஆசியாவில்
உள்ளது இதன் நீளம் 4,023  கிலோ
மீற்றர் ஆகும்


Monday, December 5, 2011

சிந்தனைத்துளிகள் -88

அஞ்சுபவர்களுக்கு உலகம் 
துன்பமயமானது, ஆனால் 
சிந்திப்பவர்களுக்கு அது 
வேடிக்கையானது

பொது அறிவு-77


தைகர் நதி ஆபிரிக்காவில்
உள்ளது இதன் நீளம் 4,184
கிலோ மீற்றர் ஆகும்


பொன்மொழிகள் - 88

ஒழுக்கம் உயர்வு தரும்.

தகவல் - 88

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி
மேரி கியூரி அம்மையார் .

மருத்துவகுறிப்புக்கள்-88



மருத்துவக்குறிப்பு - வாழைப்பழம்

கண்களைச் சுற்றி கருவளையம்
காணமல் போக
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி,
இரண்டுசொட்டு எலுமிச்சைச்சாறு
மற்றும் முட்டையின் வெள்ளைக்
கருகலந்து முகத்தில்பூசி,காய்ந்ததும்
கழுவி விடுங்கள். தோலின் கருமை
மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி
உள்ள கருவளையமும் காணாமல்
போகும்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, December 4, 2011

பொன்மொழிகள் - 87

எனது கப்பலைக் காக்கும் வித்தை
எனக்கு தெரிந்திருப்பதால், நான் 
எந்த புயலுக்கும் அஞ்ச மாட்டேன். 
(லூயிசாமே ஆல்காட்)

பொது அறிவு-76

மக்கன்சி  நதி ஆசியாவில்

உள்ளது இதன் நீளம் 4241
கிலோ மீற்றர் ஆகும்

மருத்துவகுறிப்புக்கள்-87

பூசணிக்காயிலிருந்து பிழிந்த தண்ணீரை
மோருடன் கலந்து குடித்தால் உடல்
மெலியும்(இளைக்கும்)தோல் பளபளக்கும்"

சிந்தனைத்துளிகள் -87


நீங்கள் பிரபல்யம் அடைய 
வேண்டுமானால் ஏதேனும் 
ஒரு துறையில் கடுமையாக 
உழைத்து சாதிக்க வேண்டும்

தகவல் - 87

விமானவிபத்துக்கள்  எப்படி ஏற்பட்டது
என்ற தகவல்களை  அறிய உதவுகின்ற
கறுப்பு பெட்டி முதன் முதலாக 1960 ம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, December 3, 2011

சிந்தனைத்துளிகள் -86



உங்களுடைய தவறுகளை கையாளுவதைப் போலவே மற்றவர்களுடையதையும் மென்மையாக கையாளுங்கள்

பொது அறிவு-75


லீனா  நதி தென் ரஷ்சியாவில்
உள்ளது இதன் நீளம் 4268
கிலோ மீற்றர் ஆகும்

பொன்மொழிகள் - 86

எந்தவொரு காரியத்திற்கும் 
தன்னம்பிக்கை அவசியம்

தகவல் - 86

கி.மு 776 ம் ஆண்டு கிரேக்க நாட்டில் தான் 
முதன் முறையாக ஒலிம்பிக் விளையாட்டு 
ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன்  கிரேக்க
மக்களுக்காக  மட்டும் தொடங்கிய இந்த
விளையாட்டின் புகழ் உலகெங்கும்
பரவியது .

மருத்துவகுறிப்புக்கள்-86


அம்மை நோய் வந்தால் வேப்பிலையையும்
மஞ்சளையும் சேர்த்து அரைத்து அம்மை
மேலே தடவிய பின்பு வேப்பம் தழையைப்
போட்டு அதன் மேல் படுக்கவேண்டும்.
பனைநுங்கு,இளநீர் ,குளிர்மையான
உணவுகள் உண்ணவேண்டும்.இப்படிச்
செய்தால் இந்த நோய் குணமாகிவிடும்

படிக்க ஜெயிக்க சில ஆலோசனைகள்- 27


தினமும் காலையில் (1 - 2) மணித்தி
யாலங்களும் மாலையில் (1 - 2)மணித்தி
யாலங்களும் நன்றாக மனதில் பதியுமாறு
படிக்கவேண்டும் .

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, December 2, 2011

பொன்மொழிகள் - 85

இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் 
கல்வியே, ஒரு மாநிலத்தின் அடிப்படைத் 
தேவை

பொது அறிவு-74


அமுர்  நதி ஆசியாவில் உள்ளது
இதன் நீளம் 4 ,352  கிலோ மீற்றர்
ஆகும்


சிந்தனைத்துளிகள்-85


ஏதேனும் ஒரு துறையில் கடுமையாக உழைத்து சாதிக்க வேண்டும்

மருத்துவகுறிப்புக்கள்-85

மண்ணீரல் வீக்கமுடையவர் தினமும்
நாவல் பழம் சாப்பிட்டுவந்தால்
குணமடைவார்கள்

தகவல் - 85

இந்தியாவின் முதலாவது பெண் வெளியுறவு
செயலாளர் சோபிகா ஜயர் .