முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Thursday, May 31, 2012

மருத்துவகுறிப்புக்கள்-143


ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.


சிந்தனைத்துளிகள் -143

உன்னைப் போல் பிறரை நேசி.

பொன்மொழிகள் - 143

மன்னிப்பதை விட சிறந்த தண்டனை வேறு எதுவுமில்லை. (ஆஸ்கர் வில்டே)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, May 30, 2012

பொன்மொழிகள் - 142

நிறைகுடம் தளும்பாது

புதன்கிழமை வாழ்த்துக்கள்



Tuesday, May 29, 2012

மருத்துவகுறிப்புக்கள்-142


வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.


சிந்தனைத்துளிகள் -142

தோல்வி ஏற்படுமோ என்ற அச்சமே, வெற்றியின் தடைக்கல்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, May 28, 2012

மருத்துவகுறிப்புக்கள்-141


காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.


பொன்மொழிகள் - 141

சோம்பல் சுகமானது, ஆனால் மோசமானது, மகிழ்ச்சியாக இருக்க எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருங்கள்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


சிந்தனைத்துளிகள் -141

பொறுமை கடலிலும் பெரியது.

Saturday, May 19, 2012

சிந்தனைத்துளிகள் -140

மக்களை நல்லவர்கள் என்றும் தீயவர்கள்
என்றும் பிரித்துப் பார்ப்பது ஒரு தவறு
சிலர் உற்சாகமாவர்களாகவும் சிலர்
சோர்வடைந்தவர்களாகவும் மட்டுமே
இருக்கிறார்கள்

பொன்மொழிகள் - 140

மெதுவாக முன்னேறுவதில் பயம்
வேண்டாம்;நிலைத்து நிற்கவேண்டும்
என்பதில் .பயப்படுங்கள்

மருத்துவகுறிப்புக்கள்-140


மிளகானது மனிதனுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. அத்துடன் நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.


சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, May 18, 2012

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, May 16, 2012

பொன்மொழிகள் - 139

நகைச்சுவை இல்லாத வாழ்வு எதற்கும் பயனற்றது

மருத்துவகுறிப்புக்கள்-139


உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கல்சியம், இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற விற்றமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.


சிந்தனைத்துளிகள் -139

மற்றவர்களை சந்தோஷப்படுத்த இரக்கமுள்ளவராய் இருங்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கவும் அதையே செய்யுங்கள்

மருத்துவகுறிப்புக்கள்-138


மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum) 

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.


பொன்மொழிகள் - 138

காலம் பொன் போன்றது

புதன்கிழமை வாழ்த்துக்கள்